இ.பி.எஸ் – நயினார் நாகேந்திரன் சந்திப்பு - 30 நிமிட பேச்சுவார்த்தை

politics26 பார்வைகள்
இ.பி.எஸ் – நயினார் நாகேந்திரன் சந்திப்பு - 30 நிமிட பேச்சுவார்த்தை
சென்னை:அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி (இ.பி.எஸ்.) மற்றும் தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பு, எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடைபெற்றது. இருவரும் சுமார் 30 நிமிடங்கள் முக்கியமான அரசியல் விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

சந்திப்பு நேரத்தில்,
எஸ்.பி. வேலுமணி
கடம்பூர் ராஜூ
தளவாய் சுந்தரம்

உட்பட அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் அங்கிருந்தனர்.

பின்னர் பேசிய நயினார் நாகேந்திரன்,

"இது மரியாதை நிமித்தமாக  சந்திப்பு. நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் சில முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்தோம்,"என்று தெரிவித்தார்.

இந்த சந்திப்பு, அ.தி.மு.க – பா.ஜ. கூட்டணி குறித்து அறிவிக்கப்பட்ட பின்னர், இ.பி.எஸ். மற்றும் நாகேந்திரன் ஆகியோர் முதல்முறையாக நேரில் பேசும் சந்திப்பாகும், என்பது குறிப்பிடத்தக்கது.