மைக்ரோசாப்ட் ஸ்கைப் பயன்பாட்டை நிறுத்துகிறது – பயனர்கள் 'டீம்ஸ்'க்கு மாறுமாறு வேண்டுகோள்

சிறப்பு செய்தி: உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட வீடியோ அழைப்பு மற்றும் மெசேஜிங் பயன்பாடு ஸ்கைப் (Skype) பயன்பாட்டை மைக்ரோசாப்ட் நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், ஸ்கைப் பயனர்கள் அனைவரும் தற்போது Microsoft Teams பயன்பாட்டுக்கு மாறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டில் அறிமுகமாகி, கோடிக்கணக்கான பயனர்களின் நம்பிக்கையை பெற்ற ஸ்கைப், குறிப்பாக பாண்டமிக் காலத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருகின்றது. ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை வழங்கும் Teams பயன்பாடு விரைவாக வளர்ச்சி பெற்றுள்ளது.
மைக்ரோசாப்ட் வெளியிட்ட அறிக்கையில்,
“நவீன தொழில்நுட்பங்களை ஆதரிக்கவும், ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டுப் பணிகளை எளிதாக்கவும் Microsoft Teams சிறந்த தீர்வாக உள்ளது. எனவே, Skype பயன்பாட்டை விரைவில் நிறுத்தி, Teams-க்கு மாறும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொழிலாளர்கள் மற்றும் நிறுவங்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் பழகிய பயன்பாடு என்பதால், ஸ்கைப் பயன்பாட்டை நிறுத்தும் முடிவுக்கு கலவையான எதிர்வினைகள் வெளிப்பட்டுள்ளன.
மைக்ரோசாப்ட் இன்னும் ஸ்கைப்பை எந்த தேதியில் முற்றாக நிறுத்தும் என்பதைத் தெளிவாக அறிவிக்கவில்லை. எனினும், எதிர்காலத்திற்காக Teams-ல் கணக்கை உருவாக்கி பழகத் தயாராகுமாறு நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.