Tamizhan Talks Logo

UPSC CSE முடிவு 2024 - தமிழக மாணவர் சாதனை

education170 பார்வைகள்
UPSC CSE முடிவு 2024 -  தமிழக மாணவர் சாதனை
UPSC முடிவு 2024: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) சிவில் சர்வீசஸ் தேர்வு 2024 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த முதல்நிலை தேர்வில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இதில் 14,627 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான முதன்மை தேர்வு செப்., மாதம் நடந்தது. இதனைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில், தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி, தனது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.

UPSC CSE 2024 டாப்பர் பட்டியல்: இதோ முதல் 10 பட்டியல்.
2024 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் (மெயின்) தேர்வில் சக்தி துபே முதலிடத்தைப் பிடித்துள்ளார், அதே நேரத்தில் ஹர்ஷிதா கோயல் இரண்டாவது இடத்தில் உள்ளார். டோங்ரே அர்ச்சித் பராக் மூன்றாவது இடத்திலும், ஷா மார்கி சிராக் நான்காவது இடத்திலும் உள்ளனர். இதேபோல், முதலிடத்தில் உள்ளவர்கள் பட்டியலில், ஆகாஷ் கார்க் ஐந்தாவது இடத்திலும், கோமல் பூனியா ஆறாவது இடத்திலும், ஆயுஷி பன்சால் ஏழாவது இடத்திலும் உள்ளனர். இதற்குப் பிறகு ராஜ் கிருஷ்ணா ஜா, ஆதித்யா விக்ரம் அகர்வால், மயங்க் திரிபாதி ஆகியோரின் பெயர் வருகிறது.

தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன்

தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன் தேசிய அளவில் 23வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்து உள்ளனர்.

தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கர் பாண்டியராஜ் ஆகியோரும் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிவில் சர்வீஸ் தேர்வில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் ராம் பிரகாஷ் மகன் ஸ்ரீ ருசத் அகில இந்திய அளவில் 58வது இடத்தையும் தமிழகத்தில் மூன்றாவது இடத்தையும் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.